பயிற்சி விமானம் தரையில் விழுந்து நொறுங்கிய விபத்தில் தாய், மகள் உட்பட 5 பேர் படுகாயம்..!
அர்ஜென்டினாவில் பயிற்சி விமானம் தரையில் விழுந்து நொறுங்கிய விபத்தில் தாய், மகள் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். விமானி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அர்ஜெண்டினாவில் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஜெனரல் பெல்கிரோனோ மலை கிராமத்தில் இரு சிறிய ரக விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தன. அப்பொழுது கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஒன்று கிராமத்தின் நடுவே அமைந்துள்ள தெருவில் விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் விமானத்தை இயக்கிய விமானி அதனை படம்பிடித்துக் கொண்டிருந்த தாய், மகள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த 5 பேர் படுகாயம் அடைந்தனர். விமானி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.






