கர்நாடகாவில் இன்று முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு..!
ஹிஜாப் விவகாரத்தை தொடர்ந்து கர்நாடகாவில் பள்ளிகள் இன்று முதல் தொடங்க உள்ளன. பள்ளிகளில் ஹிஜாப் அணிவதற்காக முதலில் போராட்டம் நடந்தது. எனவே அமைதியை உறுதி செய்வதற்காக எம்எல்ஏ தலைமையில் கூட்டம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட நிர்வாகம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் மதத் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் சட்டத்தை நிலைநாட்ட உதவுவதோடு உறுதியளித்ததாக தெரிவித்தனர். சீருடை கட்டாயமாக்கப்பட்ட பள்ளிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர கூடாது எனவும் தெரிவித்தார்.
இதற்கிடையில் இன்று பள்ளிகள் திறப்பதை யொட்டி ஆங்காங்கே காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. உடுப்பியில் பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளில் வருகிற 19ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து கர்நாடகா நடைபெற்ற போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கர்நாடக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் தற்பொழுது 12ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் கல்லூரிகள் திறப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.





