கோவாவில் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு..!
கோவா மாநிலத்தில் இன்று ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. 40 தொகுதிகளை கொண்ட கோவா சட்டப்பேரவைக்கு பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் சார்பில் 301 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதைதவிர, ஆம்ஆத்மீ, சிவசேனா காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. பாஜகவை சேர்ந்த முன்னாள் முதல் அமைச்சர் மனோகர் பாரிக்கர் மகன் உத்பல் பாரிக் மகன் பனாஜி தொகுதியில் அவர் தனித்து களம் காண்கிறார்.
கோவா மாநிலத்தில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வாக்காளர்கள் உள்ள நிலையில் மாநிலம் முழுவதும் 1,722 வாக்கு பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 7 மணிக்கு துவங்கும் வாக்களிப்பு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. தேர்தலை முன்னிட்டு கோவாவில் பாதுகாப்பு இரு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.





