--- --:--:-- --

6ம் வகுப்பு மாணவியின் கைவிரல் எலும்பு முறிவு.. அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மீது பரபரப்பு புகார்..!

3

செங்கல்பட்டு அருகே தலைமை ஆசிரியர் அடித்ததில் ஆறாம் வகுப்பு சிறுமிக்கு கைவிரல் எலும்பு முறிந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் மூலனூர் பகுதியில் சேர்ந்தவர் பாபு. இவரது இளைய மகள் அதே பகுதியிலுள்ள ஆதிதிராவிடர் நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.

 

அவரை ரேங்க் கார்டில் புகைப்படம் ஒட்டவில்லை என்பதற்காக தலைமை ஆசிரியர் பிரம்பால் அடித்ததாக அவரது பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இதில் மாணவிக்கு கைவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

இந்நிலையில் மாணவியை தாக்கிய தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon