--- --:--:-- --

ஒரு வயது ஆண் குழந்தையின் உயிரை பறித்த காய்ச்சல்..!

10

துரை அருகே மர்ம காய்ச்சலுக்கு ஒரு வயது ஆண் குழந்தை உயிரிழந்ததால் பொதுமக்கள் சோகமடைந்துள்ளனர். மதுரை அருகே நிலாபுரம் மீனாட்சி நகரை சேர்ந்த செல்லப்பாண்டி என்பவரின் ஒரு வயது குழந்தை சஞ்சீவ் கடந்த ஒரு வாரமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

 

எனினும் காய்ச்சல் குறையாத நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

 

இது குறித்து செல்லபாண்டி அளித்த புகாரின் பேரில் லாவண்யாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். குழந்தை காய்ச்சலால் இறந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon