பெண் ஏட்டுடன் நடனமாடி வீடியோ எடுத்த சக காவலர்..!
டெல்லி காவல் நிலையத்தில் பெண் ஏட்டுடன் சக காவலர் ஒருவர் எடுத்த நடனமாடி எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டெல்லியிலுள்ள மாடல் டவுன் காவல் நிலையத்தில் விவேக் மாத்தூர் என்பவர் கான்ஸ்டபிளாகவும், சசி என்பவர் ஏட்டாக பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் இருவரும் காவல் நிலையத்திற்குள் பணி நேரத்தில் சீருடை அணிந்த நிலையில் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர். இது தொடர்பாக இருவருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.






