--- --:--:-- --

டுவிட்டருக்கு மத்திய அரசு இறுதி நோட்டீஸ் அனுப்பியுள்ளது..!

8

புதிய டிஜிட்டல் கொள்கைகளை அமல்படுத்துவது தொடர்பாக ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு இறுதி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

இந்திய அரசின் நிதி சட்டங்களுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய டிஜிட்டல் கொள்கைகளை பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் ஏற்பதாக அறிவித்துள்ள நிலையில் அரசுக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது.

 

புதிய விதிகளை ஏற்பதற்கான கடைசி நாளான மே 26-ஆம் தேதி கடந்துவிட்ட நிலையில் ஐஐடி அமைச்சகம் சுற்றறிக்கை இறுதி எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளது. அதில் புதிய கொள்கைகளை ஏற்காவிட்டால் சட்டப்படியான பின்விளைவுகளை சந்திக்க தயாராக இருக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தலைமையில் நேற்று நடந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon