மகனை கடத்த முயன்றதாக தாய் மீது தந்தை புகார்..!
கோவை இடையார் பாளையத்தில் ஏழு வயது மகனை ஆட்கள் வைத்து தாய் கடத்த முயன்ற புகார் குறித்து சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மருந்து மொத்த விற்பனையாளரான நாக கணேஷ் ஐஸ்வர்யா தம்பதி கருத்து வேறுபாடு காரணமாக 2016 ஆம் ஆண்டு முதல் தனித்தனியாக வசித்து வருகிறார்கள். ஐஸ்வர்யா ஒப்புதலுடன் நாக கணேஷ் வீட்டில் 7 வயது மகன் ராஜேந்திரன் வசித்து வரும் நிலையில் 3 பேர் திடீர் என வந்து மகனை அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
வெளியே வந்து பார்த்தபோது கார் ஒன்றில் மகன் ராஜேந்திரனுக்காக ஐஸ்வர்யா காத்திருந்ததாக சொல்லப்படுகிறது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.






