--- --:--:-- --

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை வெளியீடு!

1.1

சாத்தான்குளத்தில் விசாரணை கைதியாக அழைத்து செல்லப்பட்டு உயிரிழந்த தந்தை, மகன் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் என்னென்ன? தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் பொது முடக்க விதிகளை மீறி செல்போன் கடை திறந்து இருந்ததாகவும் கடை அருகே இருந்த கூட்டத்தினரை தலைமை காவலர் கலைந்து போக சொன்னதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கடை உரிமையாளர் ஜெயராஜும், அவரது மகன் பென்னிக்ஸ்சும் தரையில் அமர்ந்து கொண்டு போக முடியாது எனக் கூறி தகாத வார்த்தைகளால் காவலர்களை திட்டியதாகவும், மேலும் அவர்கள் தரையில் புரண்டதில் இருவருக்கும் ஊமைக் காயம் ஏற்பட்டதாகவும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மேலும் ஜெயராஜும், பென்னிக்ஸ்சும் காவலர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவர் மீதும் காவலர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல், ஆபாச வார்த்தைகளில் திட்டுதல், 144 தடை உத்தரவை மீறுதல், கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon