--- --:--:-- --

வெள்ளத்தில் சிக்கி தவித்த தந்தை மற்றும் மகள்..!

2

காராஷ்டிரா மாநிலம் மும்பையில் வெள்ளத்தில் சிக்கி தவித்த தந்தை மற்றும் மகளை போலீஸ்காரர் ஒருவர் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

 

இடைவிடாது பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது அங்கிருந்த ஒரு வீட்டில் வெள்ளம் சூழ்ந்து கொண்டதால் காயமடைந்த தந்தை மற்றும் மகள் வெளியேற முடியாமல் தவித்தனர்.

 

இதனை அறிந்த போலீஸ்காரர் ஒருவர் விரைந்து வந்து முழங்காலளவு வெள்ளத்தில் மகளை தோளில் தூக்கிக்கொண்டு தந்தையை பாதுகாப்பாகவும் பத்திரமாக இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அவரின் இந்த தன்னலமில்லா மனித நேய செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon