--- --:--:-- --

கோழி கறி சமைத்து சாப்பிட்ட தந்தை, மகள் பலி..!

9

ரூர் மாவட்டத்தில் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மகள் உயிரிழந்த அதிர்ச்சியில் தந்தையும், உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

கரூர் மாவட்டத்தில் கோழி பண்ணையில் பணியாற்றி வரும் ஆனந்த் – பவித்ரா தம்பதிக்கு மதுஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது. இவர்கள் கோழிப் பண்ணை அருகே வசித்து வந்த நிலையில் கடையில் கோழிக்கறி வாங்கி வந்த சமைத்து கோழி குழம்பு சாப்பிட்டனர்.

 

உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் மகள் மதுஸ்ரீக்கு வயிற்று வலி ஏற்பட்டு மயக்கம் ஏற்பட்டதால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனந்திற்கும் உடல் உபாதை ஏற்பட்டதால் அவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

 

இதனிடையே மகள் மது ஸ்ரீ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மகள் உயிரிழந்த சம்பவம் கேட்டு சிகிச்சை பெற்று வந்த தந்தை ஆனந்துக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு அங்கேயே உயிரிழந்தார். இருவரது உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்படவுள்ளது.

 

இதனிடையே மனைவி பவித்ரா காவல் நிலையத்தில் அளித்த புகாரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமைத்துக் கொண்டு உண்ட கோழிக்கறியால் உடல்நல குறைவு ஏற்பட்டதா என போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon