--- --:--:-- --

சபரிமலை பக்தர்களின் பஸ்ஸை கவிழ்த்த கனமழை..!

10

கேரள மாநிலத்தில் மோசமான வானிலை காரணமாக கர்நாடக பக்தர்கள் வந்த பேருந்து கவிழ்ந்த விபத்திற்கு உள்ளானதில் 20 பேர் காயமடைந்தனர்.

 

கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் பேருந்து மூலம் சபரிமலைக்கு புறப்பட்டனர். பேருந்து எரிமேலி அருகே பேருந்து வந்த பொழுது கனமழையால் மேகமூட்டம் நிலவியுள்ளது.

 

இதன் காரணமாக வளைவில் திரும்ப முயன்ற பொழுது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்தில் பயணம் மேற்கொண்ட 43 பேரில் 20 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்து வந்த போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். எருமேலி பகுதியில் மோசமான வானிலை நிலவுவதால் பக்தர்கள் கவனத்துடன் செல்ல போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon