--- --:--:-- --

45வது நாளாக நடந்து வரும் விவசாயிகளின் போராட்டம்..!

4

விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய எட்டாம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை வரும் 15ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், கடும் குளிரில் விவசாயிகள் தொடர் போராட்டம் 45வது நாளை எட்டியுள்ளது. லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் திரும்பப் பெறும் வரை போராட்டத்தை தொடர விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

 

தொடர் போராட்டம் காரணமாக தலைநகர் டெல்லி ஸ்தம்பித்துள்ளது. 40 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேச்சுவார்த்தை நடத்தினார். டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற எட்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

 

ஆனால் சட்டங்களை திரும்பப் பெற முடியாது என மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது. இதனால் எட்டாம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

Leave a Reply

Right Menu Icon