--- --:--:-- --

விவசாயிகளிடம் விற்பனை கட்டணம் வசூலிக்கக் கூடாது!

3

விவசாயிகள் வேளாண் பொருட்களை விற்கும் போது விற்பனை கட்டணம் வசூலிக்க கூடாது என்று தமிழக முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவசரச் சட்டத்தை பிறப்பித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

 

அதன்படி விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை தமிழகத்தில் உள்ள எந்த ஒரு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில், அங்கீகரிக்கப்பட்ட தனியார் சந்தைகளிலும், அங்கீகரிக்கப்பட்ட கிடங்குகள் மற்றும் குளிர் பதன மையங்களிலும் விற்பனை செய்ய இந்த அவசர சட்டம் வழிவகுக்கும்.

 

விவசாயிகள் விளை பொருட்களை தங்கள் பண்ணையிலோ, உணவு பூங்கா வளாகங்களிலோ அங்கீகரிக்கப்பட்ட வணிகர்களுக்கு நேரடியாக விற்பனை செய்ய முடியும். எந்த ஒரு சூழலிலும் விவசாயிகள் தங்கள் வேளாண் பொருட்களை விற்பனை செய்யும் போது அவர்களிடம் விற்பனை கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று அந்த அவசரச் சட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

தமிழ்நாடு வேளாண்மை விளை பொருட்கள் விற்பனைச் சட்டம் 1987 சீர்திருத்தங்களை கொண்டு வருவது என்றும் விற்பனை குழுக்களின் தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை மே 29-ஆம் தேதிக்கு பின் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பது என்று அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon