--- --:--:-- --

இடைத்தரகர்கள் தலையீடு இன்றி கரும்புகளை கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை..!

3

யிலாடுதுறை மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக 5 லட்சம் செங்கரும்புகள் பொங்கல் கரும்புகளை இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் அரசு நேரடியாக கொள்முதல் செய்ய விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

 

பாரதிராஜபுரம், தர்மபுரி, கடலங்குடி, செம்பு தரணி, அல்லி வளாகம், ராதாநல்லூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் 200 ஏக்கரில் 5 லட்சம் கரும்புகள் பயிரிடப்பட்டு இயற்கை பேரிடர்களையும் தாங்கி தற்பொழுது அறுவடைக்கு தயாராக கரும்புகள் உள்ளன.

 

இந்நிலையில் பொங்கலுக்கு இன்னும் 10 நாட்களில் குடும்ப அட்டைகளுக்கான பொங்கல் பரிசு தொகுப்பில் செங்கரும்பு சேர்ந்து வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்ததற்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.

 

Right Menu Icon