--- --:--:-- --

ரசிகர்கள் பேனர்கள் கட் -அவுட்டுகள் வைக்க வேண்டாம்!

b408f873f977e3bb62ba957630bdad88

ரசிகர்கள் யாரும் இனிமேல் பேனர் மற்றும் கட்அவுட்களை வைக்க வேண்டாம் என நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். காப்பாளன் படத்திற்கான செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சென்னை வடபழனியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் சூர்யா, ஆர்யா, சாயிஷா, சமுத்திரக்கனி, இயக்குனர் கே வி ஆனந்த் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா சென்னையில் பேனர் விழுந்து நடைபெற்ற விபத்தில் இளம்பெண் உயிரிழந்தது வருத்தம் அளிக்கிறது என்றார். பேனர் மற்றும் கட்அவுட்களை யாரும் வைக்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். ரத்ததானம் பள்ளி மாணவர்களுக்கு உதவுதல் உள்ளிட்ட சமூக நலப் பணிகளை முன்னெடுக்குமாறு சூர்யா ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இதேபோல் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறுவதை ஒட்டி பேனர்கள் வைக்க வேண்டாம் என நடிகர் விஜய்யும் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon