பிரபல வில்லன் நடிகர் சலீம் மரணம்..!
தென்னிந்திய திரையுலகின் பிரபல வில்லன் நடிகர் சலீம் கௌஸ் திடீரென காலமானார். அவருக்கு வயது 70. மும்பையில் காலமான சலீம் கௌஸ் தமிழ் திரையுலகின் பல வெற்றிப் படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கமலின் வெற்றி விழா, விஜய்யின் வேட்டைக்காரன், விஜயகாந்தின் சின்ன கவுண்டர் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சின்னத்திரையிலும் நடித்துள்ள சலீம் ஹவுஸ் சில டிவி தொடர்களையும் தயாரித்திருக்கிறார்.
சென்னையில் பிறந்து வளர்ந்த இந்திய நடிகரான சலிம் கவுஸ் வித்தியாசமான குரலால் ரசிகர்களை கவர்ந்த நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.





