பிரபல காமெடி நடிகர் காளிதாஸ் காலமானார்..!
பிரபல காமெடி நடிகர் வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ள நடிகர் காளிதாஸ் காலமானார். தமிழ் சினிமாவில் வடிவேலுடன் பல திரைப்படங்களில் இணைந்து நடித்தவர் காளிதாஸ். இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இதில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். இவர் சிறந்த டப்பிங் கலைஞரும் ஆவார். மறைந்த காளிதாஸ் பல நடிகருக்கு குரல் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.







