--- --:--:-- --

அஜித் பட ரீமேக்கில் நடிக்கும் பிரபல நடிகை தமன்னா..!

7

ஜித் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படத்தின் ரீமேக்கில் பிரபல நடிகை தமன்னா கதாநாயகியாக நடிக்க அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

 

சிவா இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் அஜித், ஸ்ருதி ஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடித்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் வேதாளம். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது.

 

இந்த படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் அஜித் வேடத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார். தங்கையாக கீர்த்திசுரேஷ் நடிக்கிறார். இந்த படத்திற்கு போலோசங்கர் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்க இருப்பதாக கூறப்பட்ட அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Right Menu Icon