--- --:--:-- --

பீரோவில் நகையை காணவில்லை என பொய் புகார்..!

5.1

சென்னையில் நகை திருடு போனதாக கூறப்பட்ட புகாரில் சுமார் 4 மணி நேரமாக விசாரணை நடத்திய போலீசார் பீரோவின் மற்றொரு பகுதியில் இருந்து நகையை மீட்டனர்.

 

சென்னை எம்ஜிஆர் நகரை சேர்ந்த தனியார் ஐடி ஊழியர் நிறுவனரான சரவணன் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 130 சவரன் நகை கொள்ளை போனதாக புகார் அளித்தார்.

 

இதையடுத்து உயர் அதிகாரிகள் உட்பட 20-க்கும் மேற்பட்ட போலீசார் மோப்பநாய் உடன் விசாரணை நடத்திய பொழுது அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர். கைரேகை நிபுணர் வரும் வரை பீரோவை சோதனையிடவில்லை.

 

கைரேகை நிபுணர் வந்து தடயங்களை சோதனை செய்துவிட்டு நகை திருடு போனதற்கான வாய்ப்பு இல்லை என கூறியதால் வீட்டில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்பொழுது பீரோவில் இருந்த துணிகளைக்கிடையே சோதனை நடத்தி நகைகளை போலீசார் மீட்டனர்.

 

நகைகளை வழக்கமாக வைக்கும் ரகசிய அறைக்கு பதிலாக வேறு இடத்தில் வைத்துவிட்டு திருடு போனதாக போலீசாரை அலைக்கழித்ததற்காக சரவணனை போலீசார் எச்சரித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon