--- --:--:-- --

போதை பொருட்கள் வைத்திருந்ததாக பொய் வழக்கு – எஸ்.ஐ மீது நடவடிக்கை

1

போதை பொருள்கள் வைத்திருந்ததாக இரண்டு பேர் மீது பொய் வழக்கு பதிந்த திருவெற்றியூர் காவல் உதவி ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

சென்னை திருவொற்றியூரில் போதை பொருட்கள் வைத்திருந்ததாக சூர்யா, சதிஷ் என்ற இரண்டு பேரை கடந்த ஆண்டு ஜூலை மாதம் காவல்துறை கைது செய்தது. தங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி சூர்யா, சதீஷ் ஆகிய இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

 

இந்த மனு மீதான விசாரணையின் பொழுது போதை பொருட்கள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டதாக கூறப்படும் நாளில் இருவரும் காட்பாடி நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி சந்திரசேகரன் இருவருக்கும் எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

 

அதோடு அவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து திருவெற்றியூர் காவல் உதவி ஆய்வாளர் முருகன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தமிழக காவல்துறை தலைவருக்கு உத்தரவிட்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon