அசாமில் நீடிக்கும் கனமழையால் வெள்ளப்பெருக்கு..!
வடகிழக்கு மாநிலமான அசாமில் கடந்த சில நாட்களாக கனமழையால் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 89 ஆக அதிகரித்துள்ளது. அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் நேற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மேலும் 7 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் சுமார் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக பார்பாம்பு ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அரசு சார்பில் 27 மாவட்டங்களில் 1,687 வெள்ள நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மாவட்டத்திலுள்ள நிவாரண மையங்களில் மட்டும் 80 ஆயிரம் பேர் தங்கி இருக்கிறார்கள். இந்த கனமழை வெள்ளத்தில் சுமார் 60,000 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன என்றும் 2500 வீடுகள் சேதமாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





