வெடித்துச் சிதறிய சிலிண்டர்கள்… பயங்கர விபத்து..!
போர்க்களத்தில் குண்டுவெடிப்பது போன்ற இந்த மோசமான காட்சிகள், மும்பையில் ஏற்பட்ட தீ விபத்து வீடியோ. தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான தாராவியில் டிரக்கில் ஏற்றிச் செல்லப்பட்ட 20 சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியது.
இதனால், அப்பகுதியே தீப்பிழம்பாக காட்சியளித்தது. சிலிண்டரில் கசிவு ஏற்பட்டதே, இந்த விபத்துக்கு காரணம் என தகவல் வெளியாகியுள்ளது. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை.





