--- --:--:-- --

நடக்குறது எல்லாமே சர்பிரைஸ்ஸா நடக்கும் – சசிகலா பேட்டி

7

முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழாவையொட்டி அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சசிகலாவுடன் ஓ.பன்னீர் செல்வம் செங்கோட்டையன் ஆகியோர் பேசினார்.

 

ஆனால், சசிகலா வருவதற்கு முன்னதாக டிடிவி தினகரன் அந்த இடத்தில் புறப்பட்டுவிட்டார். அதைத் தொடர்ந்து சசிகலா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அடுத்து என்ன செய்ய போகிறீர்கள்? என்ற கேள்விக்கு, “நடக்குறது எல்லாமே சர்பிரைஸ்ஸா நடக்கும்” என்று பதிலளித்தார்.

 

அதைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி எல்லாரையும் துரோகிகள் என்று கூறியிருக்காரே..? இந்தத் துரோகிகளால்தான் கடந்த தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு வரவில்லை என்றும் கூறியுள்ளாரே? என்ற கேள்விக்கு சசிகலா பேசுகையில், அதிமுக ஆட்சிக்கு வரும், அதை நீங்கள் பொறுத்திருந்து பாருங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Right Menu Icon