--- --:--:-- --

பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்க கேரள அரசு முடிவு

8

மிழகத்தை போல கேரள மாநிலத்திலும் மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என என கேரள அரசு அறிவித்துள்ளது. இது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், ”அரசின் எந்தவித நலத்திட்ட நிதி உதவியும் பெறாத 35 முதல் 60 வயதுக்கு உட்பட்ட 33 லட்சம் பெண்களுக்கு ‘மகளிர் பாதுகாப்பு திட்டத்தில்’ மாதம் ரூ.1,000 வழங்கப்படும்.

 

இந்த திட்டத்திற்காக ஆண்டுக்கு ரூ.3,800 கோடி நிதி ஒதுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தலும், அதைத்தொடர்ந்து 2026 ஏப்ரலில் சட்டசபைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்க கேரள அரசு முடிவு செய்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Right Menu Icon