அனைவருக்கும் சமமான கல்வி, மருத்துவம் தேவை..தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ராமதாஸ் பேச்சு..!
19 ஆண்டுகளாக விவசாயிகளின் நலனுக்கான பாட்டாளி மக்கள் கட்சி போராடி பெறுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாஜக கூட்டணியில் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடும் பாமக வேட்பாளர் முரளி சங்கரை ஆதரித்து வாக்குகளை சேகரித்த அனைத்து தரப்பு மக்களுக்கும் சமமான கல்வி இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்பது தான் பாமகவின் நிலைப்பாடு என தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு என்று கூறி வருகின்றனர். ஆனால் விவசாயிகள் முதுகு தற்பொழுது கூனி போய்விட்டதாக தெரிவித்தார். அதனால் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து சலுகைகளும் கிடைக்க வேண்டும் என்று ராமதாஸ் பேசுகிறார்.





