முதல்வர் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு!
அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி CM ஸ்டாலின் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள அண்ணல் அம்பேத்கர் மணி மண்டபத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் CM ஸ்டாலின், அமைச்சர்கள், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, அம்பேத்கரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.






