--- --:--:-- --

விஜய் பட ரிலீசுக்கு காரில் அழைத்துச் சென்று உதவியவர் இ.பி.எஸ்..!

5

ந்திய பிரதமர் நரேந்திர மோடி, சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் புதிய வரலாறு படைத்துள்ளார். அதாவது, இன்ஸ்டாகிராம் தளத்தில் சுமார் 100 மில்லியன் (10 கோடி) பின்தொடர்பவர்களை கடந்த முதல் அரசியல்வாதி என்ற சாதனையை அவர் பெற்றுள்ளார்.

 

2014ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராமில் இணைந்த பிரதமர் நரேந்திர மோடி, தொடர்ந்து இன்ஸ்டாகிராம் செயலில் இருந்து வருகிறார். அந்த வகையில், உலக நாடுகளின் தலைவர்களுடன் ஒப்பிடும்போது பிரதமர் மோடிக்கு அதிக இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த லிஸ்டில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 43.2 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். இதைத் தொடர்ந்து இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ 15 மில்லியன் பின்தொடர்பவர்களுடனும், பிரேசில் அதிபர் லூலா டா சில்வா 14.4 மில்லியன் பின்தொடர்பவர்களுடனும் உள்ளனர்.

 

மேலும், துருக்கி அதிபர் ரெசெப் தாயிப் எர்டோகன் 11.6 மில்லியன் பின்தொடர்பவர்களுடனும், அர்ஜென்டினா அதிபர் ஜாவியர் மிலேய் 6.4 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Right Menu Icon