--- --:--:-- --

தமிழகத்தில் வரும் பிப்ரவரி 18ஆம் முதல் பொறியியல் கல்லூரிகள் திறப்பு..!

1

மிழகத்தில் பொறியியல் கல்லூரிகளை திறப்பதற்கான தேதியையும் செமஸ்டர் தேர்வு நடத்துவதற்கான அட்டவணையும் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. கட்டுப்பாடுகளை தளர்த்தியது தொடர்ந்து தமிழகத்தில் பொறியியல் கல்லூரியை திறப்பதற்கான தேதிகளை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

 

அதன்படி பொறியியல் படிப்புக்கான இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டுகளுக்கான வகுப்புகள் வரும் பிப்ரவரி 18ஆம் தேதி தொடங்கி மே மாதம் 21ஆம் தேதி வரை நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதன் பின் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் மே 24ஆம் தேதியும், எழுத்துத் தேர்வு ஜூன் 2-ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அதேபோல இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு வரும் பிப்ரவரி 14ஆம் தேதி முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரை வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இறுதியாண்டு படிப்பு காலம் முதல் செய்முறை தேர்வு ஏப்ரல் 15ஆம் தேதியும் எழுத்து தேர்வு ஏப்ரல் 26-ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Right Menu Icon