இமானுவேல் சேகரன் உருவப்படம் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம்..!
நெல்லை அருகே இமானுவேல் சேகரனின் உருவப்படத்தை அடையாளம் தெரியாத நபர் தீவைத்து எரித்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரன்கோட்டை கிராமத்தை சேர்ந்த சிலர் இமானுவேல் சேகரனின் உருவப்படம் அடங்கிய பேனரை வைத்திருக்கின்றனர்.
அதனை அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதனை கண்ட பொதுமக்கள் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி நெல்லை சங்கரன்கோவில் சாலையில் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதியளித்தனர். மேலும் அந்த பகுதியில் இருந்து சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை ஈடுபடுகின்றனர்.
இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பதற்றமான சூழல் ஏற்படுவதால் பாதுகாப்பு காரணங்களுக்காக காவல்துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





