--- --:--:-- --

ட்ரம்பிற்கு ஆதரவாக எலான் மஸ்க் பரப்புரை..!

3

டொனால்ட் ட்ரம்ப்புக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட எலான் மஸ்க் வரும் அதிபர் தேர்தலில் டிரம்பிற்கு வாக்களிக்காவிட்டால் இதுவே கடைசி தேர்தலாக இருக்கும் என கட்சித் தொண்டர்களை எச்சரித்தார்.

 

பென்சில்வேனியா மாகாணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் உரையாற்றிய நாட்டின் அரசியலமைப்பை பாதுகாக்க டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற வேண்டியது அவசியம் என தெரிவித்தார். ஜனநாயகத்தை பாதுகாக்க இந்த வெற்றி என்பது மிகவும் முக்கியம் என குறிப்பிடலாம்.

 

அனைவரும் இந்த தேர்தலில் டிரம்புக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அனைவரும் வாக்களிப்பதை கட்சி தொண்டர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்ட எலான் மஸ்க் கின்னஸ் சாதனை செய்யாவிட்டால் இதுவே கடைசி தேர்தலாக இருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்போட்டியிட்ட நிலையில் அவர் ஆதரவாக எலான் மஸ்க் பிரச்சார மேடையில் களமிறங்கியுள்ளது அந்த கட்சியினரை உற்சாகப்படுத்தியுள்ளது.

 

Right Menu Icon