ட்ராக்டர் ரொட்டேட்டரில் சிக்கி உயிரிழந்த குழந்தை..!
குடியாத்தம் அருகே விவசாய நிலத்தில் டிராக்டர் ரொட்டேட்டரில் சிக்கி 11 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவ்வாறு சிஆர்பிஎஃப் வீரராக பணியாற்றி வருகிறார்.
கடந்த வாரம் இவர் ஒரு மாத விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்றுள்ளார். மேலும் இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நேற்று உலவுப் பணி மேற்கொள்வதற்காக ட்ராக்டரில் ரொட்டேட்டரைப் பொருத்தி ஸ்டார்ட் செய்து இயக்கியுள்ளனர்.
அப்பொழுது கார்த்திகேயனின் மகள் பின்பக்கம் வந்து ரோட்டேட்டரில் ஏற முயன்றுள்ளார். அப்பொழுது ரொட்டேட்டரில் சிக்கி பலத்த காயமடைந்தார். இதனை அடுத்து அவரை மீட்டு வேலூரில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பரிசோதனை செய்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து வந்த காவலர்கள் ஜெனிகாவின் நூலை உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





