--- --:--:-- --

தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்வு – அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

3

மிழகத்தில் ஜூலை முதல் மின் கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம், தமிழ்நாடு மின்சாரவாரியத்துக்கு பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியது. இதனையடுத்து பாஜக, சிபிஐ உள்ளிட்ட கட்சிகள், மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது எனத் தெரிவித்தன.

 

இந்நிலையில், இது குறித்து மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், “கடந்த சில நாட்களாக செய்தி ஊடகங்களில் மின் கட்டண உயர்வு குறித்து அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.தற்சமயம் மின் கட்டண உயர்வு குறித்து எவ்வித ஆணையும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தினால் வெளியிடப்படவில்லை.

 

எனினும் ஒழுங்குமுறை ஆணையம், மின்கட்டணம் தொடர்பான ஆணை வழங்கிடும்போது, அதனை நடைமுறைப்படுத்துகையில் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இருக்கக் கூடாது.தற்போது வழங்கப்படும் அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரவேண்டும் எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்” என்று மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

Right Menu Icon