--- --:--:-- --

கருத்து கணிப்புகளை வெளியிட இந்திய தேர்தல் ஆணையம் தடை..!

8

ட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் மக்களவை இடைத்தேர்தல் நடைபெறும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கருத்து கணிப்புகளை வெளியிட அனைத்து அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.

 

இந்த நிலையில் அனைத்து அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் கருத்துக் கணிப்புகள் குறித்த அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

 

அதன்படி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் மற்றும் மக்களவை இடைத்தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் இன்று முதல் ஏப்ரல் 29-ஆம் தேதி இரவு 7.30 மணி வரை கருத்துக்கணிப்புகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

கருத்துக்கணிப்புகளை நடத்தவோ அல்லது மின்னணு ஊடகங்களிலும் வேறு விதங்களில் வெளியிடவும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படிஇந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon