புதுச்சேரி தேர்தல்: ஏப்ரல் 9-ம் தேதி ஜிப்மர் மருத்துவமனை ஓ.பி.டி பிரிவு இயங்காது
புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள வரும் ஏப்ரல் 9-ம் தேதி அன்று, ஜிப்மர் (JIPMER) மருத்துவமனையின் வெளிப்புற நோயாளிகள் பிரிவு (OPD) இயங்காது என்று மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தேர்தல் நாளன்று பொதுமக்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற ஏதுவாக இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அன்றைய தினம் சிகிச்சைக்காக வரத் திட்டமிட்டிருந்த வெளிப்புற நோயாளிகள் மருத்துவமனைக்கு வருவதைத் தவிர்க்குமாறு நிர்வாகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவசர சிகிச்சை மற்றும் விபத்து காலப் பிரிவுகள் வழக்கம்போல் 24 மணி நேரமும் தடையின்றி இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





