--- --:--:-- --

மதன் கௌரியின் கேள்விக்கு பதிலளித்துள்ள எலான்மஸ்க்..!

1

மின்சார வாகனங்களுக்கு இறக்குமதி வரியிலிருந்து தற்காலிக சலுகை வழங்கப்பட்டால் இந்தியாவில் நிச்சயம் டெஸ்லா கார் உற்பத்தி தொடங்கப்படும் என அந்த நிறுவனத்தின் தலைவர் எலான்மஸ்க் தெரிவித்துள்ளார்.

 

அமெரிக்க நிறுவனமான டெஸ்லாவின் மின்சார கார்களை எப்போது அறிமுகம் செய்தீர்கள் என பிரபல யூடியூபர் மதன் கௌரி கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த டெஸ்லா நிறுவனமும் அந்த நாளை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் ஆனால் உலகிலேயே மிக அதிகமான இறக்குமதி வரி இந்தியாவில் எடுக்கப்படுவதால் அதற்கான சாத்தியக்கூறுகள் அமையவில்லை என்றும் தெரிவித்தார்.

 

பெட்ரோல் டீசல் வாகனங்களை போலவே மின்சார வாகனங்களையும் இந்தியா கருதக்கூடாது என்றும் இந்தியாவின் பருவநிலை மாறுபாடு ஒப்பந்தத்திற்கு இது பொருத்தி வராது என்றும் அவர் கூறினார்.

 

அதே நேரம் மின்சார வாகனங்களுக்கு தற்காலிக வரி சலுகையை இந்திய அரசு வழங்க வேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் அப்படி வழங்கப்பட்டால் இந்தியாவில் நிச்சயம் டெஸ்லா கார் வரும் என்று யூடியூபாளர் மதன்கௌரிக்கு அவர் பதில் அளித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon