--- --:--:-- --

ராமநாதபுரத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு நடந்த திறனறிவு தேர்வு

5

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் சின்னாண்டி வலசை தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு திறனறிவு தேர்வு நடந்தது. என்எஸ்இ. 1 பவுண்டேஷன், எய்டு இந்தியா மூலம் மாணவர்களுக்கு எளிய முறையில் கல்வி கற்பித்தல், ஆங்கிலம் கணிதம் பாடங்களில் திறனறிவு கற்றல் தேர்வில் வென்ற மாணவ, மாணவியருக்கு பாராட்டு சான்று, பரிசு வழங்கப்பட்டது.

வட்டாரக் கல்வி அலுவலர் வாசுகி, தலைமை ஆசிரியை கவுரி லட்சுமி, புதூர் பள்ளி தலைமை ஆசிரியர் செங்கோல் திரவியம், எய்டு இந்தியா திட்ட மேலாளர்கள் பாஸ்கரன், முருகன், ஆசிரியர் பயிற்றுநர் தனலட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

Right Menu Icon