ராமநாதபுரத்தில் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி
இந்திய மருத்துவ சங்கம், ராமநாதபுரம் ரோட்டரி சங்கம், செய்யது அம்மாள் அறக்கட்டளை சார்பில் உலக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி ராமநாதபுரத்தில் இன்று நடைபெற்றது. ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் எம்.அல்லி தொடங்கி வைத்தார். காவல் துணை கண்காணிப்பாளர் கே.வெள்ளைத் துரை முன்னிலை வகித்தார்.
இந்திய மருத்துவ சங்க ராமநாதபுரம் கிளை தலைவர் டி.அரவிந்த் ராஜ், கவரவச் செயலர் டி.ஆனந்த சொக்கலிங்கம், நிதி செயலர் எஸ்.பி.ஆஞ்சலோ தெரசா ஜோஸ்பின், ரோட்டரி சங்கத் தலைவர் எஸ். நாகராஜன், செயலாளர் கே. மார்னிங் ஸ்டார் செந்தில்குமார், பார்த்திபன் அரசு செவிலியர் பள்ளி முதல்வர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவர் ரமணீஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அரண்மனை வாசல் முன் தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணி அரசு மருத்துவமனையில் நிறைவடைந்தது. இதில் பள்ளி, செவிலியர் பயிற்சி பள்ளி மாணவியர் கலந்து கொண்டனர். புற்றுநோய் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.





