--- --:--:-- --

எடப்பாடி பழனிசாமியை அண்ணன் என்று குறிப்பிட்டு ஓபிஎஸ் மகன் பதிவு..!

6

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது செல்போன் விழுந்த செயலை வன்மையாக கண்டிப்பதாக ஓ.பன்னீர் செல்வத்தின் மகனும் ஓ.பி.ரவீந்திரநாத் கூறியுள்ளார். எடப்பாடி பழனிசாமியை அண்ணன் வீட்டு குறிப்பிட்டுள்ளார்.

 

அவர் மீது செல்போனை எறிந்த செயல் முற்றிலும் அநாகரிகமானது எனவும் அரசியல் மற்றும் கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தாலும் நம்முடைய மரியாதையையும் சீர்திருத்தமும் குறைந்து விடக்கூடாது என்றும் கூறியுள்ளார்.

 

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரவீந்திரநாத் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். முன்னதாக அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்த கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது செல்போன் விழுந்தது. ஆர்வ மிகுதியில் தொண்டரின் கைத்தறி செல்போன் விழுந்ததாக விளக்கம் கொடுக்கப்பட்டது.

 

Right Menu Icon