அரசியல் முடிவுக்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்..!
காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பான கூட்டங்களில் தமிழக அரசு அதிகாரிகள் ஆன்லைன் மூலம் பங்கேற்பார்கள் என்று அரசின் முடிவிற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாபாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
காவிரி நீர் முறைப்படுத்தும் கூட்டத்தில் தமிழகத்தின் உரிமைகளை நீர்வளத்துறை அதிகாரிகள் பெரிதாக விவாதிப்பதில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார்.
ஆன்லைன் மூலம் பங்கேற்கும்பொழுது தமிழகத்தின் உரிமை குரல் முழுமையாக ஒலிக்குமா என்பது சந்தேகம் என்று அவர் கூறியுள்ளார். இதனால் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டங்களில் ஆன்லைன் வாயிலாக அதிகாரிகள் பங்கேற்பார்கள் என்ற முடிவை கைவிட்டு கூட்டங்களை நேரில் சென்று பங்கேற்க வேண்டும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.





