பிரதமரிடம் நான்கு கோரிக்கைகளை முன்வைத்த எடப்பாடி பழனிசாமி..!
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நூல் விலை குறைப்பு, கோதாவரி காவிரி இணைப்பு திட்டத்தை துரிதப்படுத்துவது உள்ளிட்ட நான்கு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கினார்.
நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு பிரதமர் டெல்லி புறப்படும் பொழுது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்ட தலைவர்கள் சந்தித்தனர். அப்போது தமிழ்நாட்டுக்காக 4 கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை எடப்பாடிபழனிசாமி பிரதமரிடம் வழங்கினார்.
நூல் விலையை குறைக்க வேண்டும், கோதாவரி காவிரி இணைப்பு திட்டத்தை துரிதப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். மேலும் காவிரியில் மாசு ஏற்படுவதை தடுக்கவும் சுத்தமாக வைத்திருக்கவும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், சேலம் – சென்னை இடையிலான விமான போக்குவரத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த சந்திப்பின்போது ஓ பன்னீர்செல்வத்திடம் சில நிமிடங்கள் பிரதமர் நரேந்திர மோடி தனித்து பேசியதாக கூறப்படுகிறது.






