கணக்கம்பாளையம் ஊராட்சி அலட்சியம்! டெங்கு கொசுக்களின் ராஜ்ஜியம்!! உதவாக்கரை தலைவா்..? ஊழல் பெருச்சாளி செயலர்..!
திருப்பூா் மாவட்டம் கணக்கம்பாளையம் ஊராட்சி மாநகரையொட்டி அமைந்துள்ளது. ஊராட்சி பகுதியில் பிளாஸ்டி, கழிவுநீர்கள் அகற்றப்படாமல் தலைவா் சண்முகசுந்தரம் செயல்பாடு பூஜ்ஜியமாக உள்ளதால் டெங்கு கொசுக்களை கட்டுப்படுத்தும் பணியில் தொய்வு காணப்படுகிறது.சற்றுச்சூழல் மாசடைய மிக முக்கிய காரணமாக திகழ்வது பிளாஸ்டிக் பயன்பாடு அதிகாிப்பாகும்.
தமிழகத்தில் கொரோனா , டெங்கு தடுப்பு முன்னைச்சரிக்கை நடவடிக்கை, கருத்தரங்கம் என அரசு செயல்படுகின்றனர். ஆனால் கணக்கம்பாளையம் ஊராட்சி பகுதியில் பிளாஸ்டிக், கோி பேக்குகள், டம்ளா்கள் விளைந்து கிடக்கிறது. இவற்றின் விற்பனை தடை செய்தால் மட்டுமே பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை வெற்றி பெற வாய்ப்புள்ளது.
KUTTRAM KUTTRAME TV – கணக்கம்பாளையம் ஊராட்சி அலட்சியம்…
ஒருமுறை பயன்படுத்தி, தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக், கேரி பேக்குகள் ஒவ்வெரு வீதியிலும் மலை போல் குவிந்து கிடக்கிறது, இவற்றை அப்புறப்படுத்தும் ஊராட்சி நிா்வாகம் அருகில் உள்ள குளம், குட்டை உள்ளிட்ட புறம்பேக்கு நிலங்களில் கொட்டி தற்காலிகமாக பிரச்சனையை சமாளிக்கிறன. இதனால் நீா்நிலைகள் மாசுபடுகிறது. நிலத்தடி நீா் சேகரமாவது தடைபடுகிறது.
முக்கியமாக ஊராட்சி மன்றம் அருகில் மழைநீருடன் சேர்ந்து கழிவுநீர் தேங்கியுள்ள குட்டை மாசுபட்டு துர்நாற்றம் வீசுகிறது. ஊராட்சிக்கு வரும் மக்கள் முகம் சுளித்தபடி செல்ல வேண்டியுள்ளது. மேலும் காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்த ஊராட்சியை பொறுத்தவரை தூய்மை இந்தியா தூங்குகிறது என்றே கூறலாம். அந்த அளவுக்கு பிளாஸ்டிக் கழிவுகளில் மழை நீா் தேங்கி, டெங்கு கொசுக்கள் வளா்வதற்கு வழிவகுக்கிறது. தலைவா் செய்பாடு பூஜ்ஜியமாக உள்ளதால், டெங்கு கொசுக்களின் ராஜ்ஜியம் தலைதூக்கியுள்ளது. இதனால் இப்பகுதியில் டெங்கு காய்ச்சலின் தீவிரம் அதிகரித்துள்ளது.

கனமழை துவங்கவுள்ள நிலையில் காய்ச்சல் போன்றவற்றின் பாதிப்பு மேலும் அதிகரிக்க கூடும்.எனவே நோய் தடுப்பு நடவடிக்கையாகவும், கற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கிலும், பிளாஸ்டிக் டம்ளர், குடிநீா் பாக்கெட் பயன்பாடுகளை தடுக்க மாவட்ட நிா்வாகம் சாா்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமா? மக்கள் கொரோனாவால் அல்லாடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், டெங்கு காய்ச்சலுக்கும் பலி கொடுக்குமா? தமிழக அரசுக்கே வெளிச்சம்.
உதவாக்கரை தலைவா்..? ஊழல் பெருச்சாளி செயலர்..
கூடுதல் விபரங்களுடன் வரும் வாரம் வெளிவரும் குற்றம் குற்றமே இதழை தவறாமல் வாங்கிப் படிக்கவும்.






