கடன் தொல்லையால் கணவன், மனைவி விபரீத முடிவு..!
திருவள்ளூர் மாவட்ட மாரப்பாக்கத்தில் கடன் தொல்லையால் விஷமருந்திய தம்பதியர் உயிழந்தனர். ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி சரிதா. இவர்கள் இருவரும் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு இயக்கி வந்துள்ளனர்.
பிரகாஷ் ராஜ் என்பவரிடம் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு லட்சத்தை பத்தாயிரம் ரூபாய் கடன் வாங்கியதாக தெரிகிறது .அதற்கு அவர் மாதம் வட்டி கட்டி வந்ததாக தெரிகிறது. ஆனால் கொரோனா காலகட்டத்தில் தொழில் முடங்கியதால் கட்ட முடியாது நிலை ஏற்பட்டுள்ளது. ராஜ் அதை திருப்பி கேட்டதாக சொல்லப்படுகிறது.
எனவே கணவன் மனைவி இருவரும் விஷமருந்தி தற்கொலை செய்துள்ளனர். கடன் கொடுத்த நபர் மிரட்டல் விடுத்ததாக அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு தம்பதி இருவரும் உயிரை மாய்த்துள்ளனர்.





