--- --:--:-- --

சார்ஜ் போடப்பட்டிருக்கும் பொழுது திடீரென பற்றி எரிந்த எலக்ட்ரிக் பைக்..!

2

திருப்பத்தூர் அருகே வீட்டில் சார்ஜ் செய்யப்பட்ட எலக்ட்ரிக் பைக் திடீரென தீப்பற்றி எரிந்தது. சங்கலாபுரம் கிராமத்தை சேர்ந்த சசிகுமார் இருசக்கர வாகனத்தை வீட்டில் சார்ஜ் போட்டுள்ளார். அப்பொழுது லேசாக புகை வந்ததை கண்ட சசிகுமார் உடனே மெயின் சுவிட்சை அணைத்தார்.

 

ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் வாகனம் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் அந்த வாகனத்தின் மீது தண்ணீரை ஊற்றி தீயே அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

Right Menu Icon