ஹெல்மெட் அணியாத காவலர்களுக்கு டிஎஸ்பி கொடுத்த தண்டனை..!
காரைக்காலில் ஹெல்மெட் அணியாமல் பைக் ஒட்டிய காவலர்களுக்கு நூதன முறையில் தண்டனை வழங்கப்பட்டது. காரைக்கால் மாவட்டத்தில் பணிபுரியும் இரண்டு காவலர்கள் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்றதை மாவட்ட முதன்மை காவல் கண்காணிப்பாளர் நேரில் பார்த்து நூதன முறையில் தண்டனை வழங்கினார்.
ஒருநாள் முழுவதும் போக்குவரத்து பணிகளை மேற்கொண்டு ஹெல்மெட் அணிந்து செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ரோஜா வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் ஹெல்மட் அணியாமல் செய்யும் மக்களுக்கு ஹெல்மெட் அணிவது அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த செய்தார்.





