--- --:--:-- --

டிரைவருக்கு திடீர் வலிப்பு நோய்.. ஈச்சர் வாகனம் பயங்கர விபத்து..!

8

புதுக்கோட்டையில் கட்டுப்பாட்டை இழந்த ஈச்சர் வாகன மின்கம்பம் மீது மோதி விபத்திற்கு உள்ளானது. கூட்ரோட்டில் இருந்து புதுக்கோட்டை வழியாக திருவள்ளூர் நோக்கி ஈச்சர் வாகனம் சென்று கொண்டிருந்தது.

 

மின்வாரிய அலுவலகம் வருகை வளைவில் திரும்பிய பொழுது ஓட்டுனர் உதய ராஜ்குமார் வலிப்பு நோய் வந்ததாக தெரிகிறது. இதனால் கட்டுபாட்டை இழந்த வாகனம் அருகே இருந்த மின்கம்பி மீது மோதி விபத்திற்குள்ளானது.

 

இதில் ஓட்டுனர் உதய ராஜ்குமார் சிறுகாயங்களுடன் உயிர்த்தப்பினார். போலீசார் ஓட்டுநரை மீட்டு ஊத்துக்கோட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon