காரை பின்னோக்கி இயக்கி மின்கம்பத்தில் மோதியதால் பரபரப்பு..!
ஆனைமலையில் காரை பின்னோக்கி இயக்கி மின்கம்பத்தில் மோதியதால் பரபரப்பு நிலவியது. கோவை மாவட்டம் ஆனைமலை அருகே காரை பின்னோக்கி இயக்கிய நபர் வேகமாக சென்று மின்கம்பத்தில் ஒரு விபத்தை ஏற்படுத்தினார்.
இதனால் அந்த பகுதியில் சுமார் 8 மணி நேரம் மின்சாரம் தடைபட்டது. அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் முன்னாள் ராணுவ வீரர் என தெரியவந்தது. மேலும் குடிபோதையில் இருந்ததால் காரை முன்னோக்கி இயக்குவதற்கு பதிலாக பின்னோக்கியதால் விபத்து ஏற்பட்டது கண்டறியப்பட்டது.





