காதலர் தினத்தில் ரிலீஸ் ஆகும் ‘டிராகன்’
இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகி வரும் ‘டிராகன்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, பிப். 14ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு இப்படம் வெளியாகிறது. இதில், அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின், கவுதம் மேனன், மரியம் ஜார்ஜ், விஜே சித்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். AGS நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு, லியோன் ஜேம்ஸ் இசை அமைத்திருக்கிறார்.






