--- --:--:-- --

அண்ணாமலையின் உடல்நிலை இன்று நேரில் ஆஜராவதில் சந்தேகம்..!

2

டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராவதில் சந்தேகம் எழுந்துள்ளது.

 

முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக மூத்த நிர்வாகிகளின் சொத்து பட்டியல் என கடந்த ஏப்ரல் மாதம் அண்ணாமலை பட்டியல் ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

 

இதற்காக அவர் மீது திமுக பொறியாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு அவதூறு வழக்கை தொடர்ந்தார். இந்த வழக்கில் டி.ஆர்.பாலு அண்மையில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் ஆகி விளக்கம் அளித்தார். இந்நிலையில் வழக்கின் அடுத்த கட்ட விசாரணைக்காக இன்று இரண்டாவது முறையாக மீண்டும் ஆஜராக அண்ணாமலைக்கு உத்தரவிடப்பட்டது.

 

இந்த நிலையில் அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் அவர் நீதிமன்றத்தில் ஆஜராவதில் சந்தேகம் எழுந்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon