--- --:--:-- --

தமிழகத்தை உலுக்கிய பிரியா மரணத்தில் 2 மணி நேரம் வாக்குமூலம் அளித்த மருத்துவர்கள்..!

6

வறான சிகிச்சையால் கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா உயிரிழந்த வழக்கு குறித்து இரு மருத்துவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். கல்லூரி மாணவியும் கால்பந்தாட்ட வீரங்களையும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

 

இந்த சம்பவம் குறித்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இரு மருத்துவர்களிடமும் தனித்தனியாக விசாரணை சுமார் 2 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. மாணவி பிரியா சிகிச்சைக்கு வந்தது முதல் இறப்பு வரை என்னென்ன சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.

 

இதற்கு இரு மருத்துவர்கள் அளித்த வாக்குமூலம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. இந்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து அடுத்த கட்ட விசாரணை நடைபெறும் எனவும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட செவிலியர்கள் மற்றும் மீதமுள்ள மருத்துவர்களுக்கு சமன் அனுப்பி விசாரணை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon